Wednesday 8th of May 2024 02:55:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
கரைதுறைப்பற்றில் நிறுவை, அளவை நிறுக்கும் கருவிகளிற்கு முத்திரையிட நடவடிக்கை!

கரைதுறைப்பற்றில் நிறுவை, அளவை நிறுக்கும் கருவிகளிற்கு முத்திரையிட நடவடிக்கை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் நிறுவை, அளவை, நிறுக்கும் கருவிகளிற்கு முத்திரையிடல் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் உள்ளிட்ட சகல வர்த்தகர்களினதும் குறித்த கருவிகள் பரிசோதகரால் பரிசோதித்து முத்திரையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அலுவலகத்திலும், மேலும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப அலுவலகம் முள்ளியவளையிலும் காலை 9.00மணிமுதல் மாலை 2.00மணிவரை குறித்த பணிகள் இடம்பெறவுள்ளன.

எனவே சகல வர்த்தகர்களும் பங்குபற்றி பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அறியத்தந்துள்ளார்.

குறித்த இடங்களில் ஏனைய பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டவர்களும் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு முத்திரையிடப்படாது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது 1995ம்ம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவீட்டு அளகுகள், நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE